அகில உலக ஆயர் மாமன்றம் குறித்து
சேலம் மறைமாவட்ட ஆயர் மாண்பமை முனைவர் அருள்செல்வம் இராயப்பன், D.D., D.C.L. அவர்களின் சுற்றுமடல்
——————————————————————————–
கிறிஸ்துவில் பிரியமான என் சகோதர சகோதரிகளே!
அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் 16ஆவது பொதுஅமர்வு வருகின்ற 2023 ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ளது. கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக ஒன்றிப்பு, பங்கேற்பு , நற்செய்தி அறிவிப்பு என்னும் கருப்பொருள்களின் அடிப்படையில் சிந்திக்க இம்மாமன்றம் நம்மை அழைக்கின்றது. உலகலாவிய திருஅவையாக ஒன்றிணைந்து, குறிப்பாக ஒவ்வொரு மறைமாவட்ட அளவிலும் கூட்டொருங்கியக்க வாழ்வியல் அனுபவங்களை ஒருவர் மற்றவருக்கு பகிர்ந்திடவும், அத்தகைய கூட்டொருங்கியத் திருஅவைப் பயணம் மேலும் தொடர்ந்திட அனைவரின் கருத்துகளையும் கேட்டறியவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்கு அழைப்பினை விடுத்துள்ளார்.
அவ்வகையில், சேலம் மறைமாவட்டத்தின் ஆயர் என்னும் முறையில் இம்மாமன்றம் குறித்து சில அடிப்படை புரிதல்களையும், நமது மறைமாவட்டத்தில் ஏறெடுக்கப்படவுள்ள மாமன்றச் செயல்பாடுகள் குறித்த சில விபரங்களையும் இந்த சுற்றுமடல் வழியாக உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் உளம் மகிழ்கின்றேன்.
ஆயர்கள் மாமன்றம் என்றால் என்ன?
கிரேக்கமொழியிலிருந்து உருப்பெற்ற மாமன்றம் என்ற வார்த்தையின் பொருள், ‘ஒன்றிணைந்து பயணித்தல் என்பதாகும். ஆக, ஆயர்கள் மாமன்றம் என்பது உலகலாவிய திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தைக் குறித்துக்காட்டுகிறது. மாமன்றத்திற்கான வரையரையை திருஅவைச்சட்டம் எண். 342 நமக்கு தெளிவுற விளக்குகிறது: “உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்று கூடி, இறைநம்பிக்கை, அறநெறிகள் ஆகியவற்றை திருஅவையில் பாதுகாத்திடவும் வளர்த்திடவும், திருஅவையின் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கச் செய்ய முனைந்திடவும், மேலும் உலகில் திருஅவையின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளைக் கருத்தில் கொண்டு, தங்களின் ஆலோசனைகள் வழியாக திருத்தந்தைக்கு உதவிடவும் இதன்மூலம் திருத்தந்தையோடு ஆயர்களின் நெருக்கமான ஒன்றிப்பினை பேணவும் ஏற்படுத்தப்பட்ட கூடுகையே ஆயர்கள் மாமன்றமாகும்.”
இப்புதிய மாமன்றத்தின் சிறப்பம்சம் என்ன?
வழக்கமாக அகில உலக ஆயர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து திருஅவையின் நலன் சார்ந்து ஏதேனும் ஒரு தலைப்பில் வத்திக்கானில் மாமன்றம் நடத்தப்படும். ஆனால் இம்முறை நடைபெறும் மாமன்றம் ஒட்டுமொத்த உலகத்தாரின் கவனஈர்ப்பைப் பெறுவதற்குக் காரணம், திருத்தந்தை அவர்கள் இம்மாமன்ற செயலாக்கமுறையை ஒரு பரவலாக்கப்பட்ட மாமன்றமாக மாற்றியிருக்கின்றார். அதாவது இனி மாமன்றக் கூட்டங்கள் ஆயர்களின் கூடுகையாக மட்டும் இருந்திடாமல், அனைத்து நம்பிக்கையாளர்களின் பயணமாக அவை இருக்கவேண்டுமென திருத்தந்தை விரும்புகின்றார். மாமன்ற செயல்பாடுகளில் மறைமாவட்டம், பங்கு என ஒவ்வொரு தலத்திருஅவையும் ஒன்றிணைந்த பங்களிப்பினை ஆற்றவேண்டும் என்பதே இந்த ஆயர்மாமன்றத்தின் தனிச்சிறப்பாகும். இதனையே இரண்டாம் வத்திக்கான் சங்கமும், “திருமுழுக்குப் பெற்ற அனைவரும், திருஅவையின் மீட்புப்பணிகளில் தீவிரப் பங்கேற்பாளர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள்” எனச் சொல்லுவதை நான் இங்கே உங்களுக்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
எனவே, பிரியமானவர்களே! நாம் அனைவரும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலால் தூண்டப்பெற்று, நமது மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பங்குத்திருஅவையிலும் நமது “கூட்டொருங்கியக்கப் பயணம்” ஆழமான ஒன்றிப்பு, முழுமையான பங்கேற்பு , பணிவாழ்வுக்குத் தம்மை முழுமையாகத் தந்திடுதல் என்னும் கருப்பொருள்களில் எந்த அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றும் இன்னும் எவற்றில் வளரவேண்டும் என்றும் உங்கள் அனைவரின் மேலான கருத்துகளைக் கேட்டிட உங்கள் மேய்ப்பன் என்னும் நிலையில் நான் தயாராக இருக்கின்றேன்.
இவ்வுலகில் நாம் தனித்து நடப்பவர்கள் அல்ல; நாம் சேர்ந்து பயணிக்கவே அழைக்கப்பட்டிருக்கின்றோம். கோவிட்19 பெருந்தொற்று போன்றவை நம்மை “உலகலாவிய சமூகமாக“ மீண்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆக, நிகழ்காலத்தின் அறிகுறிகளுக்கு மத்தியில், திருஅவைக்கு கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வதற்காகவும், நமது மனநிலைகளையும் திருஅவையின் கட்டமைப்புகளையும் புதுப்பிக்கவும் நாம் மேற்கொள்ளவிருக்கும் இம்மாமன்றச் செயல்பாடுகள் நமக்கு உதவிடும் என்பதில் ஐயமில்லை.
இன்று ஒவ்வொரு தலத்திருஅவையிலும் (பங்கிலும், மறைமாவட்டத்திலும்) இந்த “ஒன்றாகப் பயணம்” என்பது எப்படி நடக்கிறது? நாம் “ஒன்றாகப் பயணம் செய்வதில்” வளர்ந்திட என்ன முயற்சிகளை எடுக்க ஆவியானவர் நம்மை அழைக்கிறார்? (PD.26) என்னும் அடிப்படை கேள்விதனை மனதில் தாங்கி, பங்கு அளவில், அன்பியங்களில், நிறுவனங்களில், துறவற இல்லங்களில், பக்த சபைகளில், இளையோரிடத்தில், சிறுவர்களிடத்தில், இன்னும் சிறப்பாக ஓரங்கட்டப்பட்டவர்களிடத்திலும் திருஅவையைவிட்டு ஒதுங்கி இருப்போரிடத்திலும் திருஅவைக் குறித்த கருத்துகளை கேட்டறிந்து அதை குறிப்பெடுத்து பங்குத்தந்தை வழியாக ஆயர் இல்லத்திற்கு அனுப்பிட விழைகின்றேன்.
பிரியமானவர்களே! இம்மாமன்றம் குறித்து நமது மறைமாவட்டத்தில் ஏறெடுக்கப்படும் பரப்புரைச் செயல்பாடுகளிலும், கருத்தரங்குகளிலும், கலந்தாய்வுக் கூட்டங்களிலும், கருத்துக் கேட்டல் நிகழ்வுகளிலும் இறைமக்கள், துறவியர், குருக்கள் என எல்லாரும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பங்கேற்று திருஅவை புத்தாக்கம் பெற்றிட உங்கள் தனிப்பட்ட பங்களிப்பினை இந்நாட்களில் நல்கிட அன்புரிமையுடன் வேண்டுகின்றேன். இந்த மாமன்றப் பயணமானது நமது மறைமாவட்டத்தைப் பொறுத்தவரையில் 5 படிநிலைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிலை , பயிற்சி அளித்தல் நிலை, கருத்துக் கேட்டல் நிலை, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் நிலை, கருத்துகளை அனுப்பும் நிலை என்பதாகும்.
இறைமக்களின் நம்பிக்கையை மலரச் செய்யவும், நம்பிக்கையைத் தூண்டவும், காயங்களைப் பிணைக்கவும், புதிய மற்றும் ஆழமான உறவுகளை நெசவுசெய்யவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், உறவுப்பாலங்களை உருவாக்கவும், எண்ணங்களைப் பிரகாசமாக்கவும், இதயங்களை கதகதப்புடன் வைத்திடவும், மற்றும் நமது பொதுவான மறைப்பணிக்கென நம் கைகளுக்கு வலிமையை மீட்டெடுக்கவும் (PD, 32) நாம் ஏறெடுத்துள்ள மாமன்றச் செயல்பாடுகள் நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் சேலம் திருஅவைக்கு பேருதவியாக இருந்திடும் என்று நான் உளமாற நம்புகிறேன்.
இத்திருப்பணிகளில் தூய ஆவியார் நம் உடனிருப்பாராக.
ஆசீருடன்…
+ அருள்செல்வம் இராயப்பன்
சேலம் மறைமாவட்ட ஆயர்
சேலம் மறைமாவட்டம்
ஆயர்கள் மாமன்றத்திற்கான கூர்நோக்குப் பயிலரங்கம்
கருப்பொருள்:
For a Synodal Church:
Communion, Participation, and Mission
கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக:
ஒன்றிப்பு | பங்கேற்பு | நற்செய்தி அறிவிப்பு
***
1. Synod என்றால் என்ன?
• கிரேக்க வார்த்தையிலிருந்து உருப்பெற்ற சொல்: σύνοδος தமிழில் இதனை ஆயர்கள் மாமன்றம் என்று அழைக்கின்றார்கள்.
Greek prefix ‘Syn’ which means together and Greek noun ‘hodos’ which means road or journey. Therefore, the word synod means a journey together (ஒன்றிணைந்து பயணித்தல், உடன் பயணித்தல் அல்லது கூட்டொருங்கியக்கம் என்றும் அழைக்கலாம்). The International Theological Commission (ITC) describes synodality this way: ‘Synod’ is an ancient and venerable word in the Tradition of the Church, whose meaning draws on the deepest themes of Revelation […] It indicates the path along which the People of God walk together அனைவரும் சேர்ந்து நடக்கும் ஒரே பாதை. Equally, it refers to the Lord Jesus, who presents Himself as ‘the way, the truth and the life’ (Jn 14,6), and to the fact that Christians, His followers, were originally called ‘followers of the Way’ (cf. Acts 9,2; 19,9.23; 22,4; 24,14.22). அதனால்தான் திருத்தந்தை மாமன்ற துவக்கவிழா மறையுரையில் ‘celebrating synod means walking on the same road’ என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார்.
• ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்ககால பதிவு என்பது புனித பவுல் மற்றும் பர்னபா ஆகியோரால் எருசலேமில் நடத்தப்பட்டத்தை சான்றாக காட்டலாம். இது கோட்பாடு மற்றும் திருஅவை கொள்கை பற்றி விவாதிக்கப்பதாக இருந்திருக்கிறது.
• இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆயர்கள் மாமன்றத்திற்கான அவசியத்தை நிறுவுகிறது. பின்னர் திருத்தந்தை ஆறாம் பவுல் என்பார் இத்தகைய ஆயர் மாமன்றத்தை பொதுமைத்துவ அனுபவத்தை இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலிருந்து தொடர்ந்து பெறுவதற்கான வழியாகப் பார்க்கின்றார்.
2. வழக்கமாக வத்திக்கானில் அகில உலக ஆயர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து மாமன்றம் காலத்தின் தன்மைக்கேற்பவும் திருஅவையின் நலன் கருதியும் ஏதேனும் ஒரு கருப்பொருளில் நடத்தப்படும். ஆனால் இம்முறை ஆயர்களின் மாமன்றம் ஒட்டுமொத்த உலகத்தாரின் கவனஈர்ப்பை பெறுவதற்குக் காரணம் திருத்தந்தை அவர்கள் ஒரு மாமன்ற கூட்டமைப்பின் செயல்முறைகளை கட்டுடைத்திருக்கின்றார்.
ஆயர்களின் மாமன்றத்தின் 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விழாவில் (2015), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “இறைமக்கள், குருக்கள், உரோமை ஆயர்” என எல்லாருக்குமான ஒரு பொதுவான பாதை அமைக்கப்பெற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதுவே, முதன்முறையாக, இப்பரவலாக்கப்பட்ட மாமன்றமாக திருஅவையால் இப்போது கொண்டாடப்படுகிறது.
3. ஏன் திருத்தந்தை இப்படியொரு பரவலாக்கப்பட்ட மாமன்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்?
• The Church recognizes that synodality is an integral part of her very nature.
• One of the fruits of the Second Vatican Council was the institution of the Synod of Bishops. While the Synod of Bishops has taken place up until now as a gathering of bishops with and under the authority of the Pope, the Church increasingly realizes that synodality is the path for the entire People of God.
• Hence the Synodal Process is no longer only an assembly of bishops but a journey for all the faithful, in which every local Church has an integral part to play.
• The entire People of God shares a common dignity and vocation through Baptism. All of us are called in virtue of our Baptism to be active participants in the life of the Church. In parishes, small Christian communities, lay movements, religious communities, and other forms of communion, women and men, young people and the elderly, we are all invited to listen to one another in order to hear the promptings of the Holy Spirit.
• The Second Vatican Council reinvigorated the sense that all the baptised, both the hierarchy and the laity, are called to be active participants in the saving mission of the Church (LG, 32-33).
• Thus the teaching authority of the Pope and the bishops is in dialogue with the sensus fidelium, the living voice of the People of God. (“Sensus fidelium” is a Latin phrase that can be translated as the “sense of the faithful.” The concept concerns how the faithful together understand and live the faith.)
“It is precisely this path of synodality which God expects of the Church of the third millennium. (Address for the ceremony commemorating the 50th anniversary of the institution of the Synod of Bishops, 17 October 2015).
4. கருப்பொருள் முகிழ்ந்ததற்கான நிகழ்வு
சமீபகாலத்தில் திருஅவையில் நடைபெற்ற மாமன்றங்கள் புதிய முறையில் நற்செய்தி அறிவிப்பு, குடும்பம், இளைஞர்கள் மற்றும் அமேசான் போன்ற கருப்பொருள்களை ஆராய்ந்தாலும், இம்முறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் இயல்புத்தன்மையான கூட்டொருங்கியக்கம்/ ஒன்றிணைந்த பயணத்தை பற்றியே கவனம் செலுத்துவதே இம்மாமன்றத்தின் மீதான நமது ஆர்வத்தை அதிகரிக்கின்றது. அதாவது ஏதோ ஒரு கருப்பொருளை வெளியிலிருந்து நம் எண்ணத்திற்குள் செலுத்தி ஆய்ந்து பார்ப்பதைவிட, திருஅவையாகிய நாமே ஒரு கண்ணாடி முன்பு நின்று நமது இருத்தல் நிலையை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் உயர்ந்த நோக்கத்தோடு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
திருஅவை புத்தாக்கம் பெற்றிட மூன்று முத்தான விடயங்களை நாம் அறிந்திட அழைப்புத்தருகின்றார்:
1. deeper communion (ஆழமான ஒற்றுமை)
2. fuller participation (முழுமையான பங்கேற்பு)
3. greater openness to fulfilling our mission in the world. (உலகில் மறைப்பணி ஆற்றிட சால திறந்த மனநிலை)
5. The Fundamental Question
The current Synodal Process we are undertaking is guided by a fundamental question: How does this “journeying together” take place today on different levels (from the local level to the universal one), allowing the Church to proclaim the Gospel? and what steps is the Spirit inviting us to take in order to grow as a synodal Church? (PD, 2)
6. இந்த மாமன்றத்தின் குறிக்கோள்கள் (objectives)
1. to listen – threefold listening: as the entire People of God, to what the Holy Spirit is saying to the Church.
Threefold listening:
• by listening together to the Word of God in Scripture
• by listening to the living Tradition of the Church
• by listening to one another, and especially to those at the margins.
to inspire people to dream about the Church we are called to be
2. மக்களின் நம்பிக்கையை மலரச் செய்ய, நம்பிக்கையைத் தூண்ட, காயங்களை பிணைக்க, புதிய மற்றும் ஆழமான உறவுகளை நெசவுசெய்ய, ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள, உறவுப்பாலங்களை உருவாக்க, எண்ணங்களை பிரகாசமாக்க, இதயங்களை கதகதப்புடன் வைத்திட, மற்றும் நமது பொதுவான மறைப்பணிக்கென நம் கைகளுக்கு வலிமையை மீட்டெடுக்க (PD, 32).
3.to live out in the third millennium – This journey together will call on us to renew our mentalities and our ecclesial structures in order to live out God’s call for the Church amid the present signs of the times.
4. to move towards a Church that is more fruitfully at the service of the coming of the kingdom of heaven.
7. Phases of Synodal Process
The Experience on the Local Level – The purpose of the first phase of the synodal journey is to foster a broad consultation process in order to gather the wealth of the experiences of lived synodality. (வாழ்ந்து காட்டப்பட்ட ஒன்றிணைந்த பயணத்தின் ஒத்திசைவு அனுபவங்களின் செல்வத்தைச் சேகரிப்பதற்காக ஒரு பரந்த ஆலோசனை செயல்முறையை வளர்ப்பது.
Three Phases of the Synodal Process:
– Diocesan
– Continental
– Universal
8. Importance of Diocesan Phase
• This diocesan phase is an opportunity for parishes and dioceses to encounter, experience, and live out the synodal journey together, thus discovering or developing synodal tools and pathways that are best suited for their local context.
• Much of the richness of this listening phase will come from discussions among parishes, lay movements, schools and universities, religious congregations, neighbourhood Christian communities, social action, ecumenical and inter-religious movements, and other groups.
• this Synod not only expects responses that can assist the Assembly of the Synod of Bishops to be held in Rome in October 2023, but also desires to promote and develop the practice and experience of being Synodal in the course of the process and in the future moving forward.
9. Who can participate?
• We see throughout the Gospels how Jesus reaches out to all. He does not only save people individually but as a people that he gathers together, as the one Shepherd of the entire flock (cf. John 10:16). The ministry of Jesus shows us that no one is excluded from God’s plan of salvation. The work of evangelization and the message of salvation cannot be understood without Jesus’ constant openness to the widest possible audience.
• The Second Vatican Council highlights that “all human beings are called to the new people of God” (LG, 13).
• In this light, the objective of this diocesan phase is to consult the People of God so that the Synodal Process is carried out through listening to all the baptized. By convoking this Synod, Pope Francis is inviting all the baptised to participate in this Synodal Process that begins at the diocesan level. Dioceses are called to keep in mind that the main subjects of this synodal experience are all the baptised. Special care should be taken to involve those persons who may risk being excluded: women, the handicapped, refugees, migrants, the elderly, people who live in poverty, Catholics who rarely or never practice their faith, etc. Creative means should also be found in order to involve children and youth.
• The diocesan phase should begin by finding the most effective ways of achieving the widest participation possible. We must personally reach out to the peripheries, to those who have left the Church, those who rarely or never practice their faith, those who experience poverty or marginalization, refugees, the excluded, the voiceless, etc.
• The Synodal Process is first and foremost a spiritual process. It is not a mechanical datagathering exercise or a series of meetings and debates. Synodal listening is oriented towards discernment.
• Pope Francis characterizes the two interrelated goals of this process of listening: “to listen to God, so that with him we may hear the cry of his people.
பயணச் சூத்திரம்
செவிமடுத்தல் – முறைமை
தேர்ந்து தெளிதல் – குறிக்கோள்
பங்கேற்பு – பாதை
10. Avoiding Pitfalls
• The temptation of wanting to lead ourselves instead of being led by God.
• The temptation to focus on ourselves and our immediate concerns.
• The temptation to only see ‘problems’.
• The temptation of focusing only on structures.
• The temptation not to look beyond the visible confines of the Church.
• The temptation to lose focus of the objectives of the Synodal Process.
• The temptation of conflict and division.
• The temptation to treat the Synod as a kind of a parliament.
• The temptation to listen only to those who are already involved in Church
activities.
சேலம் மறைமாவட்டத்தில் மாமன்ற கொண்டாட்டத்திற்கான சில ஆலோசனைகள்
1. 1. Roadmap – 5 phases
Phase I – மறைமாவட்ட அளவில் மாமன்ற துவக்கவிழா
– மாமன்றம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகள்
– பங்கு அளவில் மாமன்ற துவக்கவிழா அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் 2021.
Phase II – மாமன்றம் குறித்த கருத்தரங்கம் நவம்பர் 2021 மாதம் முழுவதும்
Phase III – மக்களின் முன்மொழிவுத் தரவுகளை சேகரித்தல் டிசம்பர் 2021 மாதம் மற்றும் சனவரி 2022 பத்தாம் தேதி வரை
Phase IV – Pre-synodal meeting (மாமன்ற முன்னோட்டக் கூட்டம்) பொங்கள் விடுமுறையில் இடம்பெறும்.
Phase V – மக்களிடமிருந்தும், துறவிகளிடமிருந்தும் பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்து 10 பக்க அளவில் அகில உலக ஆயர் மாமன்றத்திற்காக சேலம் மறைமாவட்டத்தின் வரைவினை CCBI அலுவலகத்திற்கு சனவரி 2022, 30ஆம் தேதிக்குள் அனுப்புவது 30 சனவரி 2022
2. அடுத்து என்ன?
Phase I & II – விழிப்புணர்வும் பயிலரங்கம் நடத்துதலும்
மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளிலும் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி மாமன்ற துவக்கவிழா திருப்பலி மற்றும் நிகழ்வுகள் நடைபெற வேண்டும். நிறுவனங்களிலும்/துறவற இல்லங்களிலும் ஏதேனும் ஒரு நாளில் நடத்தப்பட வேண்டும்.
ஆயர்கள் மாமன்றம் சார்ந்த கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:
குருக்களுக்குக் கருத்தரங்கு
துறவியருக்குக் கருத்தரங்கு
பொதுநிலையினருக்கு (அன்பியத்தலைவர்கள், அல்லது இதரப்பொறுப்பாளர்கள்)
இளையோர்
பள்ளிக்குழந்தைகள்
வட்டார அளவில்
விழிப்புணர்வு பரப்புரைகள்
• மாமன்றம் குறித்து சிறியத் துண்டு பிரசுரம்.
• எல்லாப் பங்குகளிலும் மக்கள் பார்க்கும்படியான ஒரு வசதியான இடத்தில் மாமன்ற இலட்சினைப் பதாகைகள் நிறுவுதல்.
• மாமன்றம் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் (வட்டார அளவில், மறைமாவட்ட அளவில்).
• ஒலி & ஒளிச்சித்திரம் (EPIC). -e.g. Family gives a witnessing video for active participation in the synodal journey/ Altar boys discuss about synodality.
• மாமன்றத்தை அல்லது அதன் கருப்பொருளை விளக்கும் பாடல்கள், நடனம் .
• மாமன்றம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் வாரந்தோறும் இரண்டு வீடியோ பதிவுகள் – .
• கிராமங்களுக்குப் பயணம் –
• Listening to the Holy Spirit – (Retreat, Prayer meetings by Charismatic Renewal Team).
• Encouraging priests and people to offer Mass for the successful conduct of the Synodal Process once in a week till Jan 30.
• Creating and Disseminating WhatsApp messages
• ஒவ்வொரு பங்கிலிருந்தும் 30 முதல் 100 வரையிலான Whatsapp எண் சேகரித்தல். அதன் மூலம் நாம் தயாரிக்கின்ற அனைத்து விடயங்களையும் பதிவிடுதல்.
பள்ளிகளிலும் நிறுவனங்களிலும் விழிப்புணர்வு
• பள்ளிகளிலும் நிறுவனங்களிலும் மாமன்றம் சார்ந்த பதாகைகள் வைத்தல்.
• ஆசிரியர்களுக்கும் மாணாக்கருக்கும் மாமன்றம் குறித்த பயிலரங்கம்.
அனைத்து நிகழ்வுகளையும் ஒளிப்படங்களாக, வீடியோக்களாக நமது மறைமாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்
Phase III – இறைமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுதல் – சில வழிமுறைகள்:
• கேள்வி & பதில் முறை.
• கலந்தாய்வுக் கூட்டம்.
• அன்பியங்களில் மாமன்ற கருப்பொருள் சார்ந்த விவிலியப் பகுதிகளை இறைமக்கள் விளக்கும்போது சொல்லும் விவரங்களை அகழ்ந்தெடுத்தல்.
• கதைகள் சொல்லி குழந்தைகளிடமிருந்து கருத்துகளைப் பெறுதல்.
• சிறு குழுவில் நம்பிக்கை வாழ்வை, அல்லது திருஅவைசார்ந்த செயல்பாடுகள் குறித்து ஒருவர் பகிர்ந்திட அதிலிருந்து குழுவினரின் விளக்கங்கள், ஏற்பு எதிர்ப்புகளைச் சேகரித்தல்.
• கனவுத் திருச்சபை என்னும் பொருண்மையில் குழந்தைகள்,இளவல்களுக்கு வரைதல் போட்டி நடத்தலாம்.
• பெரியவர்களுக்குக் கட்டுரைப்போட்டி நடத்தலாம்.
• பேச்சரங்கம் – யாராவது ஒருவரை பேச சொல்லிவிட்டு பிறகு அதனடிப்படையில் கலந்தாய்வு விவாதங்களை உருவாக்கி மக்கள் மனதில் உள்ள கருத்துகளைப் பெறலாம்.
• ஒவ்வொரு பங்கிலும்/நிறுவனத்திலும் குறைந்தது 2 செயல்பாடு (கேள்வி, பதில் தாள் பெறப்படுவது நீங்கலாக).
• ஒவ்வொரு பங்கும் இரண்டு முதல் 5 பக்க அறிக்கையை மறைமாவட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
• பங்குத்தந்தையர் வட்டார அளவில் இதனை நிறைவேற்றிட வட்டாரத் தொடர்பாளர் தந்தையர் முறையாக கூட்டம் நடத்தி துவக்கவிழா திருப்பலி, கருத்தரங்கு, மற்றும் மாமன்றத்திற்காக மக்கள் விடுக்கும் கருத்தருக்களைச் சேகரித்தல். இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுடன், ஒவ்வொரு பங்கில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிப்படங்களாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். இது பள்ளிகள் மற்றும் பணிக்குழுக்களை ஒருங்கிணைக்கும் தந்தையருக்கும் பொருந்தும்.
சில குறிப்புகள்:
• Phase IV & V பற்றியச் செய்திகள் பிறகு அறிவிக்கப்படும்.
• தொடர்பாளர்கள் தரவு சேகரிக்க புதிய முறைகள் ஏதேனும் இருக்குமாயின் அதனை முன்மொழியலாம்.
• வட்டாரத் தொடர்பாளர் தந்தையர் விரைவில் வட்டார அளவில் கூட்டம் நடத்தி பங்குத்தந்தையரை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.
• பணிக்குழுக்களில் உள்ள தந்தையர்களும் தங்கள் பணிக்குழுக்களின் இயல்புக்கேற்ப மாமன்ற சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி தரவுகளைப் பெற்று இரண்டு முதல் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் மறைமாவட்டத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.
• ஏதேனும் மாமன்றம் குறித்த விளக்கத்தை பெறவோ, கருத்தரங்கு நடத்திட உதவியோ தேவைப்படின் மறைமாவட்டத் தொடர்பாளரை (9791911313) நீங்கள் எப்பொழுதும் அணுகலாம்.